திங்கள், 18 நவம்பர், 2013

பதினெட்டா இல்லை பதினாறா?


ெருக்கெடுத்து ஓடிவரும்

ாவிரி ஆற்றுக்கு

பதினெட்டாம் பெருக்கென

படைத்து வழிபடுவது

தமிழக பெண்களின் பாரம்பரியம்.

ற்றிய காவிரி, மண்ணாய் கிடக்க

ுழாய்த்தண்ணீர் கொண்டுவந்து

படைத்தது எதற்கு?

பதினெட்டா இல்லை பதினாறா?

 

ெண் சிசுக் கொலையைத்

தடுத்து நிறுத்தாமல்

ெத்தனமாய் இருந்ததினால்

சீரழிந்து போனதிந்த நாடு.

ஆண்பெண் எண்ணிக்கை

சரிசமமாயில்லாததால்

ஒவ்வொரு நாளும் கற்பழிப்பும்

பாலியல் கொடுமைகளும்

மலிந்து போனதுபோனதுபோல்

 

காவிரி நதியின் பகிர்வை

சுமூகமாய் தீர்க்காமல்

காலம் கடத்துவதால்

வருடங்கள் அதிகமில்லை

வந்துவிடும்

ஒரு குடம் தண்ணீருக்கு

விழப்போகும் கொலைகள்.

கடல் நீரில் உருவாகும்

சுனாமி பேரலைகள்-நாளை

தண்ணீருக்காகவும் எழலாம்

 

அரசியலாக்காமல்

உச்ச நீதிமன்ற பரிந்துரைபடி

செயல்படுத்த முனைவது

இல்லையேல் கங்கையைக்

காவிரியோடு இணைப்பது

அதுவரை

நாட்டு மக்களின் நலம் கருதி

காவிரி நீரை பகிர்ந்தளிப்பது

ஒரே நாடு ஒரே மக்கள்

என்பதால்.

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக