வியாழன், 14 நவம்பர், 2013

உறவு


ிண்ணை விட்டு இறங்கும் மழை

ண்ணுக்கு உறவு

ஆழ்கடல் தாண்டி ஓடிவரும் அலை

கரைக்கு உறவு

உள்ளத்தில் உருவாகும் கருத்துக்கள்

எழுத்துக்கு உறவு

உறவில் பலவகை உலகில் உண்டு

அதில் ஒவ்வொன்றும் ஒருவகை!

 

அன்னை தந்த உறவு

ுதல் உறவு

கூடப்பிறந்த உடன்பிறப்பு

இரண்டாம் உறவு

மணமேடையில் துணையானவள்

மூன்றாம் உறவு

அவர்களுக்கு பிறக்கும் குழந்தை

நான்காம் உறவு

இதற்குப்பின்தான் இதர உறவுகளென

மற்ற எல்லா உறவுகளும்

அண்ணன் தம்பி உறவைவிட

அக்கா தங்கை உறவு அழுத்தமானது

 

பிள்ளை, பெற்றோர் உறவு தூரமானதால்

முதியோர் இல்லம் ஊருக்கு உறவு

தொட்டால் சுடுவது நெருப்பு

தொடாமல் சுடுவது உறவு

பக்கபலமாய் இருக்கும் உறவு

பக்கவிளைவை தருவதுமுண்டு

வாழ்க்கை பயணத்தில்

வறுமை வந்தால் பறந்துவிடும் உறவு

நடக்கும் வரை நாடெல்லாம் உறவு

படுத்துவிட்டால் பாயும்

பகைத்துக்கொள்ளும்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக