வியாழன், 14 நவம்பர், 2013

நிம்மதி கிடைக்காதோ?


ோம்பேறியாய் இருந்துகிட்டு

ும்மா சும்மா கவலப்பட்டு

உழைக்காம வாழ்ந்திருந்தா

வறுமைதான் போய்விடுமோ?

 

ெட்டித்தனமா சுத்திகிட்டு

ிக்கனத்தையும் விட்டுபுட்டு

ஊதாரியாய் வாழ்ந்திருந்தா

ஏழ்மைதான் போய்விடுமோ?

 

ின்னவீடு வச்சிகிட்டு

ாக்கு ருசியாய் தின்னுகிட்டு

மருந்தும் எடுக்காம வாழ்ந்திருந்தா

ோய் தான் போய்விடுமோ?

 

உற்றார் உறவோடு சண்டையிட்டு

எப்போதும் மனசில வச்சுகிட்டு

விட்டுக்கொடுக்காம வாழ்ந்திருந்தா

பகைமைதான் போய்விடுமோ?

 

அடுத்தவர் பொருள்மீது ஆசைபட்டு

மற்றவர் உயர்வதில் வேதனைப்பட்டு

நிறைமனமில்லாது வாழ்ந்திருந்தா

பொறாமைதான் போய்விடுமோ?

 

ஒற்றுமையாய் ஒன்றுபட்டு

ஓயாம உழைச்சுகிட்டு

நேர்மையாய் வாழ்ந்திருந்தா

வாழ்வில் நிம்மதிதான் கிடைக்காதோ?

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக