திங்கள், 2 ஜூன், 2014

குடி தண்ணீர்.


மக்கள் குடிப்பதற்கு தண்ணீரில்லையே—அதைக்

கொடுப்பதற்கு இங்கு யாருமில்லையே

எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கக் கவணமில்லையே

சாவைத்தவிர வேறுவழித் தெரியவில்லையே.

 

ஏழைகளைக் காக்க உணவு சட்டம் வரவில்லையோ

அதுபோல குடிப்பதற்கு தண்ணீர் சட்டம் தேவையில்லையோ

மக்களின் துயரை மறந்து போனாரோ—இல்லை

குப்பையென்று இதை ஒதுக்கி வைத்தாரோ.

 

காய்ந்துபோன விளைநிலங்கள் மாறவில்லயே

இறந்துபோன விவசாயி திரும்பவில்லையே

காசு பணம் போனாலும் கவலையில்லையே

எங்கு தேடியும் குடிநீர் கிடைக்கவில்லயே.

 

ஓடிவந்த காவிரி மறைந்து போனதோ

தேடி நிற்கும் தமிழகத்தை மறந்து விட்டதோ

வேலைவெட்டி இல்லாம விவசாயி உயிரை விட்டாரோ

காலம்பூரா கத்தியும் குடிநீர் கிடைக்கமாட்டாதோ.

 

பாரத நாட்டில் வற்றாத நதிகள் ஓடவில்லையோ

தாகம் தீர்க்காமல் வீணாகிக் கடலில் கலக்கவில்லையோ

புதிய திட்டத்தால் நதிகளை இணைக்கவேண்டமோ

மக்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டாமோ.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக