வெள்ளி, 6 ஜூன், 2014

நலமுடன் வாழ்வாரன்றோ!


 
 
விலைவாசி உயர்வாலே
விடியவிடிய உழைத்தாலும்
சாகாம இருப்பதற்கு
சோறு, தண்ணீ கிடைக்காம
சீராக வாழமுடியுமோ?
 
பள்ளி பல இருந்தாலும்
பண அன்பளிப்பு இல்லாம
பள்ளியிலே சேர்ப்பதில்ல—பெத்த
பிள்ளைகள் படிப்பதற்கு
பொன் தாலியொன்று போதுமோ?
 
நெற் களஞ்சியமென
பேரெடுத்தத் தஞ்சையே
தரிசாக் கிடக்கையிலே
தவிச்ச வாய்க்கு தண்ணீரைத்
தந்திடுமோ மழை மட்டும்?
 
உறங்கும் தொழில் விழித்தெழ
மருத்துவ வசதி நலமுற
இரவில் பாடம் படித்திட
விளைபயிர் விலை நிலைபெற
வேண்டாமோ தடையற்ற மின்சாரம்?
 
வறுமையிலே வாடினாலும்
வட்டிக்கு பணம் வாங்கி
கல்வி கற்க போன பிள்ளை
கார் விபத்தில் செத்ததற்கு
சனத்தொகைதான் காரணமோ?
 
மக்கட்தொகை தானென்றால்
மட்டுபடுத்த வேண்டாமோ?
இரண்டு குழந்தைக்கு மேல்
பெற்றுக்கொள்வது குற்றமென
சட்டம் கொண்டு வந்தால்
தீராதோ குறைகளெல்லாம்?
 
அனைத்து பிரச்சனையும்
அகன்றுவிட்டால்
நிராசை மறையுந்தானே!
நாட்டு மக்கள் எல்லோரும்
நலமுடன் வாழ்வாரன்றோ!
 
 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக