வியாழன், 17 ஏப்ரல், 2014

விழிக்கட்டும் சமுதாயம்


வசந்த காலத்தை

வரவேற்க

மூடர்கள்

மூடாமல் போனாரோ.

 

ஆழம் அறிந்தவன்

காலை விடவில்லை—நீ

ஆழம் தெரியாமல்

தலையை விடலாமோ.

 

பாவம் செய்தவன்

தலை நிமிர்ந்து நிற்க

நீ ஏதும் செய்யாமல்

தலை கவிழ்ந்து போனாயோ.

 

வறுமையின் வரவால

உன் தாய் போராட

நீயோ பொறுக்காமல்

தாயைவிட்டு போனாயோ.

 

மண்ணை தோண்டி—விதை

விதைப்பது வழக்கம்

ஆழ்குழாய் துளையிட்டு

பச்சிளம் சிசுக்களை விதைப்பது

புதிய முறையோ.

 

மகுடம் துறந்த புத்தன்

அன்போடு வாழ போதித்தும்

அன்பில்லா மாந்தராலே—நீ

உன்னையே துறந்தாயோ

 

அறியாத மக்களின்

அவல நிலையல்ல இது,

ஆணவமும் அகம்பாவமும்

அறிந்த வெட்கக்கேடு

 

என்ன நடக்கிறது

அடுத்தடுத்து குழந்தைகள்

வீழ்ந்து மடிவதை

பாராதோர் யார்யாரோ.

 

இரக்கமற்ற மரணங்கள்

இனியும் நடவாமல்

எல்லோரும் உயிர் வாழ

விழிக்கட்டும் சமுதாயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக