வெள்ளி, 4 ஏப்ரல், 2014

வழிபட மறந்ததில்லை


பாவையரை ஏமாற்றி

பாவிகளின் வன்மம்

பாவங்கள் புரிந்திடுது.

பாரத தேசத்தில்

மாதர்களின் கருவறையும்

பாதுகாப்பின்றி தவித்திடுது.

கடவுளிடம் முறையிட-அவன்

கருவறைக்குள் போவதற்கு

காரிகையை தடுத்திடுது.

ஆனாலும் பெண்களை

இறைவனின் சரிபாதியென

ஊரு சொல்லிடுது.

 

தன் கருவை தானே காத்திட

தாய்க்கு உரிமையுண்டோ?

கர்ப்பத்தில் பெண்ணென்றால்

அறிவியலும், மருத்துவமும்

அழிக்காமல் விட்டதுண்டோ?

தவறிப் பிறந்தாலோ

நெல்லு மணியாலோ

கள்ளிப் பாலாலோ- உயிரை

எடுக்காமல் காத்ததுண்டோ?

ஆனாலும்

ஆணும் பெண்ணும்

சரி சமமென

சொல்லாமலிருந்ததில்லை

 

ஒரு நாள் கூத்துக்கு

வருடங்கள் பல காக்கவைத்து

அந்தபுரத்து பெண்களை

பாழ்படுத்திய மன்னனும்,

கன்னி மலர்களை

கசக்கி நுகரும் கயவர்களும்

ஆண்வர்க்கம் தானே!

காலம் காலமாய்

கட்டுபாடற்ற ஆண்களின்

கயமைதானே காரணம்.

ஆனாலும்

பெண்களை

காக்கும் தெய்வமாய்-என்றும்

வழிபட மறந்ததில்லை.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக