ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

ஆண்ட‌வ‌னுக்கே வெளிச்ச‌ம்


சித்திரை மாத‌
கோடை வெப்பத்தில்
கூட்டமாய் நீர்தேடி
நெடுந்தூரம் நடந்தபோதும்

பார்வை படாத‌
புதர்களுக்கிடையில்
பதுங்கி வந்த புலி
பாய்ந்து துரத்தியபோதும்

பறவைகள் ஒலியெழுப்பி
மேலே பறக்க‌,
உயிரைக் காக்க‌
சிதறி ஓடியபோதும்

எதையும் எண்ணாத‌
மானுக்குக்
கூடவந்தத் தன்னினம்
காணாதபோதும்

நிற்காத மான்களின்
செவிகளில் சன்னமாய்
ஒரு ம‌ர‌ண‌ ஒலி கேட்டு
அடங்கியபோது

திரும்பிப் பார்த்துத்
திகைத்து நின்ற‌ மானுக்கு
நாளையை எண்ணும்போது
ந‌ம்புமா இறைவ‌னை?

இறைவ‌ன் வ‌ஞ்சிப்ப‌தில்லை
பாவ‌ப்ப‌ட்ட‌ மானுக்கு
வாழும் ஆண்டுக‌ள்
நூறென்றும்

அடித்துக் கொல்லும் புலிக்கு
ப‌தினெட்டென்றும்
ப‌டைத்த‌வ‌ன்
அவ‌ன் தானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக