திங்கள், 21 ஏப்ரல், 2014

ஒன்று போலத்தான்.


பகலும் விலகாமல்

இருளும் வாராமல்

வாசம் சிந்தாமல்

வீசும் இளந்தென்றல்

மனம் பரப்பி மகிழும்—ஒரு

பொன் மாலைப் பொழுது.

 

மஞ்சள் நிற சேலைக்கு

இளஞ்சிவப்பு பார்டர்

எடுத்து வைத்து காத்திருக்க

உலா வர எழும்

நிலாப் பெண்

உடுத்தும் முன்னே

 

பண்பறிந்து பகலவன்

படுக்கையில் சாய

முழு மதியோ—தன்

விருப்பப்படி தேடி

கருப்பு சேலையுடுத்தி

வானில் வலம் வந்தாள்.

 

வெள்ளை நிறத்தழகி

என்பதால்

கருப்பு சேலை அணிந்தாளோ!

ஆடை தேடி அணிவதில்

அகிலத்து பெண்களெல்லாம்

ஒன்று போலத்தான்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக