ஞாயிறு, 18 அக்டோபர், 2015

உறவை பறைசாற்றும்



மண்ணையும்
மங்கையரின் மனதையும்
நனைத்து போகும் நதியை
நினைத்து மகிழ
ஓர் ஆடிப்பெருக்கு

பயிர் விளைத்த நிலத்துக்கும்
நிலம் உழுத காளைக்கும்
உளம் கனிந்து எடுக்கும்
ஒரு பொது திருவிழா
பொங்கல் பண்டிகை

பாகுபாடின்றி அனைவருக்கும்
படிப்பறிவு தந்து
மேன்மையுறச் செய்யும்
கல்வி அன்னைக்கு
ஒரு சரஸ்வதி பூஜை

தேசத்தை அழிக்கும்
தீமைகளை வீழ்த்த
பட்டாசு வெடித்தும்
பழையன கலைந்தும்
கொண்டாடும் ஒரு தீபாவளி

மாசுபடுத்தாத
எல்லா தொழில்களையும்
வாழ்த்தி போற்றி
வணங்கும் ஒரு நந்நாள்
ஆயுத பூஜை

ஒற்றுமையையும்,
உழைப்பையும் போற்றவும்
கலைகளை வளர்க்கவும்
நல்ல தருணங்களாக
திருநாட்கள் அமைந்தன

நம்பிக்கைகளின் கொண்டாட்டமே
நம் பண்டிகைகள்—அன்றவை
இயற்கைக்கும், மனிதனுக்கும்
இருக்கும் உறவை
பறைசாற்றியது

அறிவதற்கும், பகிர்வதற்கும்
அன்றைய பண்டிகைகள்
வாய்ப்பளித்து மகிழ்ந்தன—இன்றோ
சிந்தனையற்ற சடங்குகளாகி

முடங்கியது வேதனை தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக