செவ்வாய், 6 அக்டோபர், 2015

குடம்



கருக்கலில் மட்டுமல்ல
காலம் முழுதும்—வருகைக்குக்
காத்துக் கிடக்கும்
குடும்பத்து சாமானியம்

கோடை வெய்யிலிலும்
கோபமேதும் கொள்ளாமல்
குடிசைக்கு வெளியே
குந்தியிருக்கும், பாட்டிபோல

கட்டிய கணவனோடு
குடி போகும் மணப்பெண்
கொடுக்காத வரதட்சனையால்
கருகி சாவதுபோல்

கஞ்சம் சுமக்காமல்
குடிலுக்கு வந்ததால்
குணத்தை இழந்து—மனித
கோபத்தில் உருக்குலையும்

குறையாத நீர் சுமந்தது முன்பு
குணக்குன்றாகி செப்பானது—இன்றோ
குண்டியமேற்று
கெட்டு விட்டது பிளாஸ்டிக்கென.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக