ஞாயிறு, 18 அக்டோபர், 2015

எழுதாத சமூகக்கட்டுபாடு




இறந்த செய்தி கேட்டு
யாராக இருந்தாலும்
போய் பார்த்து
துக்கம் விசாரிப்பதென்பது
எழுதாத சமூகக்கட்டுபாடு

ஆயிரம் துரோகம் செய்து
அல்லல் பட்டு, உலகை விட்டு
செல்லும் மனிதரைக்
கண்ட பின் தான்
தன் வினை தன்னைச் சுடுமென
அறியத் தோன்றும்

உறவிடம் ஆறுதல் கூறுவதும்
இறந்தவரைப் பற்றி
நல்லதை பேசுவதும்
குறையைக் கூறக்கூடாதென்பதும்
முன்னோர்கள் சொன்னது

பிணத்தைத் தூக்க ஆளிருந்தும்
சுடுகாடு வரை செல்ல
ஆள் இல்லாதது
கெட்டவர்களின் முடிவு
இப்படித்தான் என அறிந்து
நல்லது செய்து வாழவேண்டும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக