புதன், 12 மார்ச், 2014

குடி கெடுக்கும்.


ஊருசனம் ஒன்றுகூடி

தருகின்ற உழைப்பால்

காடுகூட உருமாறி

சோலையாகும்.

 

ஊரோடு ஒட்டாமல்

குடிக்கின்ற மதுவால்

சாலைகூட இவனுக்கு

வீடாகும்.

 

ஓடிவரும் ஆறெல்லாம்

வரண்டு போச்சு

ஆடிவரும் இவனுக்குக்

குடிமட்டும் வற்றாது.

 

தன் நிலை தானறியான்

அன்பினை இழந்திடுவான்

சொர்க்கம் தெரிந்ததென்பான்

சொன்னாலும் கேளாதவன்.

 

நாதியற்று வீதியிலே

நாயோடு படுத்திருப்பான்

மாறவழி சொன்னாலும்

தேறவழி தேடமாட்டான்.

 

குடிப்பழக்கம்-என்றும்

குடி கெடுக்கும்

வாழ வைத்ததாய்

வரலாறு இல்லை.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக