புதன், 12 மார்ச், 2014

குறவர்கள்.


மற்றவர்கள் செய்யும் தொழிலில்

இவர்கள் நுழைவதில்லை

இவர்கள் செய்யும் தொழிலிலோ

மற்றவர்கள் நுழைய முடிவதில்லை

பஞ்சத்தில் வாடினாலும்

இலஞ்சத்தைத் தொடாதவர்கள்.

 

எளிமையான இனமென்று

எல்லோரும் சொல்லிடுவார்-இந்த

மருத நிலத்து மலைவாழ் மறவர்கள்

முடியுமென்று முயற்சிப்பதால்

மலைகள்கூட இவர்களை

அன்னாந்து பார்க்கும்.

 

அரசியல் பாதையில்

அடியெடுத்து வைத்தவரெல்லாம்

மற்றவர் நலம் மறந்ததால்

கூடாரங்களில் வசிக்கும் இவர்கள்

தேர்தல் நேரத்தில் மதிக்கப்பட்டு

மறந்துபோன ஏழை குடிமக்கள்

 

பெண்ணடிமை இல்லாது வாழும்

சீர்திருத்தவாதிகள்.

விதவை மறுமணம்-அந்தி

பொழுதுக்குள் வீடு வரவேண்டும்

என்ற உயரிய கட்டுப்பாட்டால்

விபசாரத்தை ஒழித்த பெருமக்கள்.

 

கூட்டமாய் இடம்பெயர்ந்து

நாடோடியாய் வாழ்பவர்கள்

வயிற்றுப் பிழைப்புக்கு ஆண்கள்

வேட்டையாடுவதும்,மணி கோர்ப்பதும்,

பெண்கள்,பச்சை குத்துவதும்

கை பார்த்து குறிசொல்வதும்

இவர்கள் தொழிலாகும்

 

குழந்தை ஆணா,பெண்ணாவென்று

எப்போதும் கவலை கொள்ளாதவர்கள்

பல நாட்கள் குளிக்காமலிருந்தாலும்

ஒரு நாளும் கெடுதல் எண்ணாதவர்கள்

பெரும் எதிர்பார்ப்பு இல்லாமல்

நிம்மதியாய் வாழ்பவர்கள்.

 

குறத்தி மகளான வள்ளியை

பழனி முருகன் மணந்திருந்தும்

ஆசையோடு மகளை பார்ப்பதற்கு

மருமகனின் வீடு செல்ல- அனுமதி

மறுக்கப்பட்ட உறவினர்கள்

இந்த குறவர்கள்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக